தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டண பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்.

செய்திகள்

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டண பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம். தருமபுர ஆதீனம் 27-வது மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளினர்.

அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம்  செய்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும், முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் எழுந்தருளும் நிகழ்வும்  நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *