பைக் ரேஸ்சில் ஈடுபடுவதற்காக அதிவேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி அமைத்து கேக் வெட்டி வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்கள், கொத்தாக அள்ளிய போலீஸ், 13 இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல்.

செய்திகள்

பைக் ரேஸ்சில் ஈடுபடுவதற்காக அதிவேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி அமைத்து கேக் வெட்டி வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்கள், கொத்தாக அள்ளிய போலீஸ், 13 இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்துக்கு சென்றனர். அப்போது இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றில் ஒரு இருசக்கர வாகனத்தின் அருகே கேக் வெட்டி பட்டாசுகள் வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர் அப்பொழுது அதிவேக இரு சக்கர வாகனம் புதிதாக வாங்கிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அதிவேக வாகனங்களில் சைலன்சர் பகுதியை மாற்றி அமைத்து அதிகமான சத்தம் எழுப்பக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டதும் தடை செய்யப்பட்ட ஹாரன்களை உபயோகம் செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து விதிமுறைக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட உதிரி பாகங்களுடன் இருந்த 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து டிஎஸ்பி அலுவலகம் கொண்டு வந்தனர். இருசக்கர வாகனங்களை வைத்திருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் படிக்கும் மாணவர்கள் என்பதால் அவர்களது விபரங்களை சேகரித்து வைத்து கொண்டு வாகனத்திற்கான உரிய ஆவணங்களுடன் பெற்றோர்களை அழைத்து வந்து உரிய விளக்கம் அளித்து வாகனத்தை திரும்பபெற்று செல்லுமாறு டிஎஸ்பி திருப்பதி உத்தரவிட்டார். அதிவேக வாகனங்களை புதிதாக வடிவமைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் செல்வது போல் வாகனங்களை வேகமாக இயக்கி மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *