செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 2 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வினியோகம் 167 மாணாக்கர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் மிதிவண்டிகளை வழங்கினார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஆக்கூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 140 மிதிவண்டிகள், ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 27 மிதிவண்டிகள் என மொத்தம் 167 மிதிவண்டிகள் வழங்கும் விழா ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ – மாணவிகளுக்கு வழங்கி விழா சிறப்புரையாற்றி பேசினார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.