சீர்காழி அருகே 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கதண்டு கடித்ததில் கூலித் தொழிலாளர்கள் 11 பேர் படுகாயம்.

செய்திகள்

சீர்காழி அருகே 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கதண்டு கடித்ததில் கூலித் தொழிலாளர்கள் 11 பேர் படுகாயம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சரஸ்வதி விளக்கம் கிராமத்தில் உள்ள கன்னி வாய்க்கால் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியானது இன்று நடைபெற்றது. இப்பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த வனமயில், சந்திரன், வாசுகி, லதா, சரஸ்வதி, கஸ்தூரி, ராஜமாணிக்கம், கலாமதி, வடிவேல், வசந்தா, பொன்னாச்சி ஆகிய 11 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அருகில் இருந்த மரத்திலிருந்து  பலத்த சத்தத்துடன் பறந்து வந்த கதண்டு வண்டுகள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை தாக்கி கடித்துள்ளது. இதில் லேசான காயமடைந்த நான்கு பேர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயம் அடைந்த ஏழு பேர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *