சீர்காழியில் தனியார் வங்கியில் திடிர் தீ விபத்து, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியே ஓடியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சட்டநாதர் காலனியில் CSB தனியார் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை சுமார் 11 மணி அளவில் வங்கியில் உள்ள இன்வெட்டர் பேட்டரி அறையில் திடிர்னு தீ பற்றி மளமளவென்று எரிய தொடங்கி வங்கி முழுவதுமாக கரும்புகை சூழ்ந்தது. வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறியவாறு வங்கியிலிருந்து வெளியேறினர்.
அதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.