மயிலாடுதுறை அருகே புதியபாதை அறக்கட்டளை மற்றும் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மெகா மருத்துவ முகாம். கிராம மக்கள் ஏராளமானோர் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயன்பெற்றனர்:-
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கிளியனூர் கிராமத்தில் புதிய பாதை அறக்கட்டளை மற்றும் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மெகா மருத்துவ முகாம் அல்-ஹிதானா மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமில் மகப்பேறு, கண், பல், தோல் நோய், காது, மூக்கு, தொண்டை என பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமையில் 50-க்கு மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
கிளியனூர் முத்தவல்லி அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்ற முகாமை அறக்கட்டளை பொறுப்பாளர்கள். செல்வேந்திரன், ரகோத்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமவாசிகள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பலன் அடைந்தனர்.