கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர் அணி சார்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் காலை உணவு வழங்கினர்.
கலைஞர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் நெசவாளர் அணி சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை முன்பு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் காலை உணவு வழங்கி கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் செல்வராஜ் ஏற்பாட்டில் மயிலாடுதுறை நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான குண்டாமணி (எ) செல்வராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர்.
மேலும் தற்போது தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நெசவாளர் அணி பொறுப்பாளர்கள் சம்பத், அசோக், தர்மலிங்கம், விஸ்வநாதன் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், தொழிற்சங்கம் ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற உறுப்பினர்கள் ரத்தினவேல், சர்வோதயன், மணிமேகலை மணிவண்ணன், ரிஷி மற்றும் சிறுபான்மை அணி நகர அமைப்பாளர் சலீம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.