மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
மயிலாடுதுறை புனித பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்; சார்பில் மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வுவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் மாவட்ட அளவில் திறன் போட்டி தேர்வு நடத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள புனித பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் இன்று திறன் போட்டி தேர்வு நடைபெற்றது.
புனித பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 93 தேர்வர்களும், தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 207 தேர்வர்களும், தருமபுரம் ஞானம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 162 தேர்வர்களும் தேர்வு எழுதினர்.
இதில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட பிறப்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.