அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

செய்திகள்

சீர்காழி அருகே கொண்டல் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொண்டல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த மனோ விஜயன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி அதே பகுதியை சேர்ந்த மோகன் அருண்குமார் என்பவர் மற்றும் கொண்டல் ஊராட்சியை சேர்ந்த சிலர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

அந்த மனுவில், கொண்டல் ஊராட்சி மன்ற தலைவர் மனோ விஜயன் என்பவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், எதிராகவும் மோசடி செய்து நிதி ஆதாயம் சட்டத்திற்கு புறம்பாகவும், எதிராகவும் மோசடி செய்து நிதி ஆதாயம் அடைந்துள்ளதாகவும், மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பல்வேறு மோசடிகள் செய்துள்ளதாகவும், வெளிநாட்டில் பணிபுரியும் பல்வேறு நபர்கள் பெயரில் இன்றைய தேதி வரை 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவது போல் போலியாக கணக்கு காண்பித்து கையெழுத்திட்டு பணம் எடுத்து உள்ளார். இதேபோல் கல்லூரிக்கு சென்று தற்போது வரை கல்வி பயின்று வரும் மாணவி பேரிலும் 100 நாள் வேலை செய்தது போல் போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும், இதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் அதேபோல் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட மக்கள் நலத்திட்ட நிதிகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கும் 100 நாள் அட்டை வழங்கி முறைகேடு செய்துள்ளார். தொடர்ந்து ஒரே நபரின் பெயரில் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளிலும் பணி செய்தது போல் கணக்குகட்டியுள்ளது உள்ளிட்ட அனைத்தையும் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோகன் அருண்குமார் மாவட்ட ஆட்சிருக்கு அளித்த மணுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *