பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை செய்து கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியது, மற்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்து அதிமுக சார்பில் மயிலாடுதுறை சின்ன கடை தெரு, நகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.