மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது . வேட்பாளர்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனந்த தாண்டவபுரம் , மணல்மேடு , பட்டவர்த்தி , தலைஞாயிறு , சித்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவைத் திரட்டினார். அப்போது திருவாளப்புத்தூர் பகுதிக்கு சென்ற வேட்பாளருக்கு சாலை முழுவதும் தண்ணீர் தெளித்து அவசர அவசரமாக வேட்பாளரை பார்த்ததும் கோலமிட்டு மலர் தூவி வரவேற்றனர். பின்னர் வேட்பாளர் பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்தவுடன் ஆரத்தி தட்டுகளால் வேட்பாளரை சூழ்ந்த பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வேட்பாளர் நன்றி தெரிவித்து தவறாமல் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரச்சாரத்தை தொடர்ந்தார்.