மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் மார்கோனி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஆயிரம் லிட்டர் நீர் மோர் ஒரு டன் தர்பூசணி, 500 இளநீர், ஆயிரம் நுங்கு, மூவாயிரம் குளிர்பான பாட்டிகள், கேழ்வரகு கூழ், ரோஸ் மில்க், பாதாமில்க் என பெரிய அண்டாக்களில் வைத்து கோடை உஷ்ணத்தை தணிக்கும் வகையில் அனைத்து விதமான குளிர்பானங்கள் என பொதுமக்களுக்கு வழங்கினார். முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் நீர் மோர்பந்தலை தொடங்கி வைத்தால் தொடர்ந்து தேடி தேடிச் சென்று அதிமுகவினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு குளிர்பானங்கள், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கியது பொதுமக்களுக்கு பெரிதும் பயனாக அமைந்தது.