மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.