மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஐந்து நிமிடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு.

செய்திகள்

மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் குடிநீர் கழிவறை, உள்ளே செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஐந்து நிமிடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது இங்கு 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படும் நிலையில் அவற்றின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக ஓய்வு அறை அமைந்துள்ளது. இந்த ஓய்வு அறையில் கழிவுநீர் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படாத காரணத்தால் இரவு நேரத்தில் பணி முடிந்து ஓய்வு எடுக்கும் பணியாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் கேன்டீன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி இன்று CITU தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நிறைவு பெற்று 5 நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேருந்து பணிமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கழிவறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட அவர், சுகாதாரமாக முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் ஓய்வு அறையில் தனியாக கழிவறை ஏற்படுத்த வேண்டும் என்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு   உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *