சந்திரபாடி மீனவ கிராமத்தில் பால் குடத்திருவிழா 700-க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு.

செய்திகள்

மயிலாடுதுறை அடுத்த சந்திரபாடி மீனவ கிராமத்தில் பால் குடத்திருவிழா 700-க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழாவின் பால்குடம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் 15  நாட்கள் நடைபெறும் விழா இந்த ஆண்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கோவிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி மஞ்சள் உடை உடுத்திய காப்பு கட்டி விரதம் இருந்த 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள், செண்டை மேளம் முழங்க பால்குடங்கள் சுமந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சந்திரபாடி, சின்னூர்பேட்டை மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர். பால்குடம் திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *