மயிலாடுதுறை நகராட்சி சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்பு.

செய்திகள்

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்பு. மாணவர்களுக்கு நிகராக தூய்மை பணியாளர்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்:-

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் பொதுமக்கள் இடையே தூய்மை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மராத்தன் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் பந்தயம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் நகராட்சி அலுவலகத்திலேயே முடிவடைந்தது.

இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள்  ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் வயது முதிர்ந்த பெண்கள் உட்பட பலரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியில் தன்னார்வலர்கள் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நகராட்சி அலுவலகத்தில் அரங்கேற்றினர். அப்போது தூய்மை பணியாளர்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர். தொடர்ந்து ஏராளமான ஊழியர்கள் சிலம்பம் சுற்றி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.