மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் இமயநாதன் தலைமையில் அருமை காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு வழங்கினார். இதே போல் மங்கைநல்லூர் கடை வீதியில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கினார் . இதில் ஒன்றிய அவைத்தலைவர் தியாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட பிரதிநிதி கணேசன், பொருளாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைப்போன்று மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில், சோழம்பேட்டை மற்றும் மாப்படுகையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மயிலாடுதுறை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, அவைத்தலைவர் எம்.பி.எம் பாலு, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி குமாரசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.