கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
சீர்காழி நகர் பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப்பைகள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. இதனை அடுத்து சீர்காழி நகர் பகுதிக்கு ரகசியமாக வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக சீர்காழி, கொள்ளிடம் முக்கூட்டுப் பகுதியில் உள்ள கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிரடி சோதனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஈசானிய தெரு பகுதியில் உள்ள மளிகை கடைக்குச் சென்ற அவர் அங்கும் சோதனை மேற்கொண்டார்.
அப்பொழுது இரண்டு கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்து சென்றார்.