இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வடகரை மற்றும் அரங்கக்குடியில் உள்ள முஹையித்தீன் ஆண்டவர், ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், ராஜகுமார் மற்றும் ஆதரவாளர்களுடன் பள்ளிவாசல்களுக்கு வந்து ஊர் ஜமாத்தார்கள், நாட்டாமைகள், பஞ்சாயத்தார்கள் மற்றும் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவைத் திரட்டினார். அதைத்தொடர்ந்து தொழுகைக்கு வந்திருந்த குழந்தையை தூக்கி கணத்தை கிள்ளியும் வேட்பாளர் முத்தமிட்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து துண்டு பிரசுரங்களை வழங்கி ரமலான் வாழ்த்து தெரிவித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.