மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்:-

செய்திகள்

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்:-

மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தியும், கூட்டாட்சி முறைக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசையும், ஆளுநர் ஆர்.என். ரவியையும் கண்டித்து தமிழக முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமாரி எம்எல்ஏ உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன‌ உரையாற்றினர்.

தொடர்ந்து, மத்திய பாஜக அரசு  மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருவதாகவும், பாஜக அல்லாத மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதியை பாரபட்சமான முறையில் பகிர்ந்து அளிப்பதும், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கு தடை விதிப்பது, ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வருகிறது. கூட்டாட்சி முறைக்கு எதிராகவும், இந்திய அரசியல் சட்ட விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பது போன்ற தேச விரோத செயல்களை செய்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *