குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பொதுமக்களுக்கு டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், டெங்கு பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் நடத்திய பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஓவியா விஜயகுமார் டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்ற மாணவர்கள் டெங்குகொசு கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி, பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.