ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு சகோபுர தரிசனம். ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா காட்சி. தருமபுர ஆதீனம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்

செய்திகள்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு சகோபுர தரிசனம். மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி மயில் மற்றும் ரிஷப வாகனங்களில் எழுந்தருள செய்யப்பட்டு வீதி உலா காட்சி. தருமபுர ஆதீனம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் பெருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளான இன்று வெள்ளி ரிஷப மற்றும் மயில் வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசன காட்சி நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு கோயில் முன்பு ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிச் செய்யப்பட்டனர். தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில்  எழுந்தருள செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் தருமபுரம் ஆதீனம் வடம் பிடித்து சகோபுர தரிசன காட்சியை தொடங்கி வைத்தார். பஞ்ச மூர்த்திகள் ஆதீன மாட வீதிகளில் வலம் வந்தது. பொதுமக்கள் வீடுகள்தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.