மத்திய அரசின் மக்கள் தொடர்பகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் டிஜிட்டல் மற்றும் புகைப்பட கண்காட்சி:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.

செய்திகள்

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மக்கள் தொடர்பகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் டிஜிட்டல் மற்றும் புகைப்பட கண்காட்சி:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மக்கள் தொடர்பகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைமுறை மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த டிஜிட்டல் மற்றும் புகைப்பட கண்காட்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், அஞ்சல்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம், சமூக நலத்துறை சார்பில் மக்கள் நல திட்டங்கள் குறித்த அரங்குகள், சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அரங்குகள், உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சியில் எளிமையாக மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் அரசின் மக்கள் நல திட்டங்களையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நமது வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் ஊட்டச்சத்துகளின் அவசியம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதால்  மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் சிறுதானியங்களை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஆகியவை குறித்த டிஜிட்டல் மற்றும் புகைப்பட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு விளக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *