உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

செய்திகள்

மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தொடர்ந்து  நீர்மோர்பந்தல் திறந்து நீர்மோர் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை திமுக பகுத்தறிவு மன்றத்தில் திமுக நகர கழகம் சார்பாக நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஏற்பாட்டிலும்,  சுப்ரமணியபுரம் பகுதியில் மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அகமது ஷவாலியுள்ள ஏற்பாட்டில் புதிய நீர் மோர் பந்தலை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பட்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் செல்வமணி ஏற்பாட்டில் சீனிவாசபுரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலில் உழைக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் ரோஸ் மில்க்ல் ஆரம்பித்து இளநீர், பழம், நீர்மோர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்ட அனைத்தையும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஆர்வமுடன் நீர்மோர் மற்றும் பழ வகைகளை வாங்கி அருந்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *