செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்:-

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தகித்து வரும் கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கத்திரி வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இன்று நீர் மோர்பந்தல் திறக்கப்பட்டது. வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு நீர் மோர்பந்தலை திறந்து வைத்தார்.

மேலும் பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி பருகி தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டு பயன்பெற்றனர். இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில் பணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்  அப்துல்மாலிக் மற்றும்  திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *