மகாத்மா காந்தி பெயரில் செயல்படும் உமா மகளிர் உயர்நிலைப்பள்ளி காந்தி வித்யாலயம் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம். மாணவிகள் காந்தியின் புகழை பாடி பேரணியாக சென்றனர்.
மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மகாத்மா காந்தி பெயரில் செயல்படும் உமா மகளிர் உயர்நிலைப்பள்ளி காந்தி வித்யாலயம் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்; மாணவிகள் காந்தியின் புகழை பாடி பேரணியாக சென்றனர்:-
நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் 1956-ஆம் ஆண்டு கட்டப்பட்டு மகாத்மா காந்தியின் பெயரால் தமிழ் இலக்கியவாதியும், காந்தியவாதியுமான முனைவர் மு.அருணாசலம் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட காந்தி வித்யாலயம் உமா அரசு உதவிபெரும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. காந்தியின் உருவப்படத்துக்கு மு.அருணாச்சலத்தின் வாரிசுகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், இப்பள்ளியில் பயிலும் 50 மாணவிகள் டிரம்ஸ் வாசித்தவாறு, காந்தியின் புகழைப் பாடியவாறு பேரணியாக சென்று கிராமத்தின் முக்கிய விதிகளை சுற்றி வந்து மீண்டும் பள்ளியை அடைந்தனர்.