உணவு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி சிறுமியை கடத்திச் சென்ற நபர் பொதுமக்கள் உதவியுடன் கைது. சிறுமி மீட்பு சிறுமியை கடத்திச் செல்லும் சி.சி.டி.வி. வெளியானது.

செய்திகள்

சீர்காழியில் உணவு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி சிறுமியை கடத்திச் சென்ற நபர் பொதுமக்கள் உதவியுடன் கைது. சிறுமி மீட்பு சிறுமியை கடத்திச் செல்லும் சி.சி.டி.வி. வெளியானது.

விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாயவன் (40) இவர் இரண்டு கண் பார்வையும் இழந்து ஊர் ஊராக சென்று பாட்டு பாடி யாசகம் பெற்று வருகிறார். கண் பார்வை இல்லாத மாயவன் யாசகம் பெறுவதற்கு தனக்கு உதவி செய்வதற்காக அவருடைய தங்கை  மகள்களான 11 வயது, 12 வயது உடைய இரண்டு சிறுமிகளை உதவிக்கு அழைத்து வந்துள்ளார். இவ்வாறு மாயவன் சீர்காழி பகுதியில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது மணிக்கூண்டு பகுதியில் யாசகம் பெரும்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் கண் பார்வையில்லாத மாயவனை அழைத்து வந்து ஒரு கடையின் வாசலில் அமர வைத்துவிட்டு அவருடன் இருந்த 11 வயது சிறுமியிடம் தான் உணவு வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் அச்சம் அடைந்த மாயவன் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அழுதவாறு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பொதுமக்கள் சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சிறுமியை கடத்தி சென்ற நபரை தேடிவந்தனர். இந்நிலையில் சீர்காழி தோப்புபள்ளி அருகே  இளைஞர் ஒருவருடன் சிறுமி ஒருவர் அழுதவாறு செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். சிறுமியை கடத்திய நபர் சீர்காழி அடுத்த கோயில்பத்து பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(32) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த ரஞ்சித்தை சிறையில் அடைத்தனர். சிறுமி மீட்க்கப்பட்டு மாயவனிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியை இளைஞர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *