பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், என்ற திட்டத்தின் கீழ் மயிலாடுதுறையில் மினி மராத்தான்; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் விளையாட்டு துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 11 வயது முதல் 21 வயது வரை உடைய பெண்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஓட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் முடிவடைந்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.