இளம்பிள்ளைவாதத்தால் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி டீ விற்று சேமித்த ரூ.3 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியவர்கள் மீது போலீஸில் புகார்.

செய்திகள்

மயிலாடுதுறையில் இளம்பிள்ளைவாதத்தால் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி டீ விற்று சேமித்த பணத்தை ஏமாற்றியவர்கள் மீது போலீஸில் புகார்:- ரூ.3 லட்சம் வரை ஏமாற்றப்பட்டதாக பேட்டி:-

மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி ஜெயந்தி. இவர் இளம்பிள்ளைவாதம் பாதிப்பால் குழந்தையாக இருந்தபோதே இரண்டு கால்களும் செயலிழந்த 100 சதவீத மாற்றுத்திறனாளி. சிறுவயது முதல் தேனீர் வியாபாரம் செய்து சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தை அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு, அவர்கள் கேட்டபோது கொடுத்துள்ளார். தனது திருமணத்தின்போது திருப்பித்தாருங்கள் எனக்கூறியுள்ளார். அந்த வகையில் ரூ.3 லட்சம் வரை பணத்தை கொடுத்துள்ளார். 

இந்நிலையில் ஜெயந்திக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் சிலம்பரசன் என்பவருடன் திருமணமானது. இந்நிலையில், பணம் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டால் அவர்கள் திருப்பித் தராததுடன், 4 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்ததாக போலீஸில் புகார் அளிப்போம் என ஜெயந்தியை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கணவர் சிலம்பரசனின் உதவியுடன் சைக்கிளில் வந்த ஜெயந்தி தனது பணத்தை மீட்டு தர வலியுறுத்தி இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவை படித்துப்பார்த்த அதிகாரிகள் அதனை மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு பரிந்துரைத்து செய்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *