மயிலாடுதுறை மாவட்டத்தில் "இல்லம் தோறும் திமுக இளைஞரணி" என்ற திட்டத்தை மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தொடக்கி வைத்து வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று “இல்லம் தோறும் திமுக இளைஞரணி” என்ற திட்டம் அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை தொகுதியில் மன்னம்பந்தல், மாயூநாதர் கோயில் வடக்கு வீதி ஆகிய இடங்களிலும், பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலிலும் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க துண்டுபிரசுரம் மற்றும் மஞ்சள் பை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


