சீர்காழி அருகே காரைமேடு சித்தர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற "18 சித்தர்கள் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் ராஜேந்திர சுவாமிகளின் ஆறாம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகா யாகம் வெகு விமர்சையாக இன்று நடைபெறுகிறது.
சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர் புறத்தில் அமைந்துள்ள 18 சித்தர்கள் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடம் நிறுவனர் நாடி சித்தர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் ஆறாம் ஆண்டு மகா குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. மேலும் உலக நன்மை வேண்டியும், நோய் நொடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டியும் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகா யாகம் நடைபெறுகிறது. இதில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை குறிக்கும் வகையில் ஆறு அக்னி குண்டங்கள் அமைத்து மகா யாகம் நடைபெறுகிறது.
அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெறும் விழாவில் முன்னாள் அமைச்சரும், நாகை மாவட்ட கழக செயலாளருமான ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட கழக அவைத் தலைவர் பிவி.பாரதி, மாவட்ட மகளிரணி செயலாளர் ம.சக்தி, ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை நாடி.செல்வ முத்துக்குமரன், நாடி.செந்தமிழன், நாடி.மாமல்லன் மற்றும் நாடி.பரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.