ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பக்தர்கள் சங்கல்பம் செய்து வாராஹி அம்மனின் ஸ்லோகங்களை கூறி கூட்டு வழிபாடு.

செய்திகள்

மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பக்தர்கள் சங்கல்பம் செய்து வாராஹி அம்மனின் ஸ்லோகங்களை கூறி கூட்டு வழிபாடு நடத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தெய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விரலி மஞ்சள் மற்றும் பலவகை வண்ணமலர் மாலைகளால் அலங்காரம் செய்து பஞ்சமுக தீபாரதனை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டாக சங்கல்பம் செய்து வாராஹி அம்மனின் ஸ்லோகங்களை கூறி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அம்மனுக்கு வாழை இலையில் அரிசியை பரப்பி தேங்காய் மூடியில் நெய்விளக்கு தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *