அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயிலில் மழை வேண்டி மகா நவசண்டி யாகம்:- தங்கத்தாலி, வெள்ளி கொலுசு, 14 பட்டுப்புடவைகள் 235 மருந்துப்பொருட்களை தீயில் இட்டு நடைபெற்ற மகா யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

செய்திகள்

மயிலாடுதுறை அருகே மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற மகா நவசண்டி யாகம்:- தங்கத்தாலி, வெள்ளி கொலுசு, 14 பட்டுப்புடவைகள், நவ தானியங்கள், 235 மருந்துப்பொருட்களை தீயில் இட்டு நடைபெற்ற மகா யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 4-ஆம் ஆண்டு மகா நவசண்டி யாகம் இன்று நடைபெற்றது. இதையடுத்து, கோயிலின் முன்பு மிகப்பெரிய யாககுண்டம் அமைக்கப்பட்டு யாகவேள்வி நடைபெற்றது. இதில், தங்கத்தாலி, வெள்ளி கொலுசு, வெள்ளி மெட்டி, 13 நிறப்பட்டுப்புடவைகள், நவ தானியங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகை பருப்புகள் மற்றும் 235 மருந்துப்பொருட்களை தீயில் இட்டு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து, மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மழை வேண்டி வழிபாடு நடத்தினர்.