ஸ்ரீ சீதாளா தேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா. 16 அடி நீள அளவு காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடியபடி ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

செய்திகள்

தரங்கம்பாடி அருகே இலுப்பூர் ஸ்ரீ சீதாளா தேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா. 16 அடி நீள அளவு காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடியபடி ஊர்வலமாக வந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் திருக்கோயிலின் 28-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 20-ஆம் தேதி காப்புகட்டி விழாவனது துவங்கியது. அதனை தொடர்ந்து தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைசனை செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றுது. 8-ஆம் நாள் முக்கிய நிகழ்வான இன்று தீமிதி திருவிழா சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் சக்திகரகம் முதலில் இறங்க அதனை தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்புகட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 16 அடி நீளம் கொண்ட அளவு காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடியவாறு தீக்குழயில் இறங்கி தீ மிதித்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து  பச்சைக்காளி பவளக்காளி ஆட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனையானது காண்பிக்கப்பட்டது.