மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் அடங்கிய கடங்களை யாகசாலையில் வைத்து, பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி நான்கு கால பூஜை நடைபெற்றது. நான்காம் கால பூஜை முடிவில் பூர்னாகுதி செய்து தீபாரதனை நடைபெற்றது.
பின் புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார் தங்கள் தலையில் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் மற்றும் மல்லாரி வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடாகி கோயில் கோபுர கலசங்களை சென்றடைந்தது. பின் பட்டாச்சாரியார்கள் வேதங்களை ஓதி, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்பொழுது கும்பாபிஷேகத்தை காண வந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பி கும்பாபிஷேகத்தை கண்டு பெருமாளின் அருளை பெற்றனர்.