காந்தியடிகள் நினைவு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க திமுக முடிவு செய்திருந்தது. அதன்படி, மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினமான இன்று மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா.எம். முருகன் எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தியும், மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள் உட்பட இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், பட்டாச்சாரியர்கள் என மும்மதத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.