மயிலாடுதுறையில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் 2,641 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:- மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

செய்திகள்

மயிலாடுதுறையில் 'மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ் 2,641 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:- மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

மயிலாடுதுறையில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் வருவாய்த்துறை, பேரூராட்சி, நகராட்சி, தொழிலாளர் நலவாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் பட்டா மாற்று ஆணைகள், இலவச வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு பெயர் மாற்று ஆணைகள், தொழில் தொடங்க கடனுதவிகள், வீட்டுவரி பெயர் மாற்ற ஆணைகள், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டைகள் என 2,641 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச.18-ஆம் தேதி முதல், நிகழாண்டு ஜன.6-ஆம் தேதிவரை மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சி பகுதிகளிலும், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சி பகுதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட 3,010 மொத்த மனுக்களில், தகுதியுடைய 2641 மனுக்கள் ஏற்கப்பட்டன. அந்த மனுக்களுக்கு இன்று ரூ.2,13,79,184 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *