மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்தும் செயல்வீரர் கூட்டம் திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு பேசினர்.
அமைச்சர் மெய்ய நாதன் பேசுகையில் இந்தியா முழுவதும் இருக்கின்ற அரசியல் இயக்கங்கள் தமிழக முதலமைச்சர் என்ன முடிவெடுக்கின்றார் என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார் என உற்று நோக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராக மட்டுமில்லாமல் தேசிய தலைவராக உள்ளார் எனவும், சர்வாதிகாரம் உலகில் எந்த இடத்திலும் நீடித்ததாக வரலாறு கிடையாது 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்ததாகவும் வரலாறு கிடையாது இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா எனக்கென்று குடும்பம் கிடையாது மயிலாடுதுறை மக்களை நம்பி வந்திருக்கின்றேன் நீங்கள் அனைவரும் உங்கள் சகோதரியாக உங்கள் பெண்ணாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் தான் என் குடும்பம் என கண்களில் கண்ணீர் தழும்ப கனத்த குரலில் பேசினார்.