இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தனது கூட்டணிகட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது. ஒருசில கட்சிகளுடன் எந்தெந்த தொகுதி என்று பிரித்துகொடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி திமுக கூட்டணியில் காங். கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக பரவலாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்ற வேலையில். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கருக்கு வாய்ப்பு குறைவு என்றும் ராகுல்காந்தியின் நண்பரான பிரவின்சக்கரவர்த்தி என்பவர் போட்டியிடப்போவதாக கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் 11 முறை வெற்றிபெற்ற காங். கட்சியில் இந்த முறையும்வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் தொகுதியில் வசிக்கக்கூடியவர்களுக்கும், மகளிருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று காங். கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மயிலாடுதுறை காங். முன்னாள் நகரத் தலைவர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி காங். கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக கூறப்படுகிறது. தொகுதியில் வசிக்கக்கூடிய கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்கள் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து பணியாற்ற முடியும். அதிகாரிகள், அடிக்கடி சந்தித்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடமுடியும். பொதுமக்கள் நலனை பாதுகாக்க மயிலாடுதுறை தொகுதியில் மரகதம்சந்திரசேகர் எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு இல்லை. மகளிருக்கு வாய்ப்புகொடுத்தால் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும். மயிலாடுதுறை தொகுதிக்கு மண்ணின் மைந்தர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும கட்சி மாநில, தேசிய தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார்.