மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வேழ முரித்தான்பேட்டை பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவி மானவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் வழங்கினார்.
பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பேனா வழங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ராஜா ,அப்துல் மாலிக், மற்றும் திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.