மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல், பருத்திக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர் குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட சிங்கனோடை, அனந்தமங்கலம், ஆனைக்கோயில், காழியப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர் வருடத்திற்கு மூன்று போகமும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் குளத்து நீர் மற்றும் மழை நீரை நம்பியே அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்து வரும் நிலையில் கடந்த மாதம் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் கடுமையான வெயிலினாலும் தண்ணீர் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருவதால் இந்த மழை நிலக்கடலைக்கு ஏற்றதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலக்கடலை பயிர் தற்போது பூக்க தொடங்கியுள்ளதால் பயிர் செழித்து வளரவும் நன்கு பூக்கள் பூக்கவும் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.