மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமம் வெள்ளாந்தெருவில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இப்பகுதி கிராம மக்களின் சீரிய முயற்சியால் கோவில் புனரமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு இன்று அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை செய்து பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவ வாத்தியங்கள் மற்றும் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் எது விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.