மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தரையில் அமர்ந்து மௌன விரதம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொறுப்பாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும் , சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும் , யுஜிசி யில் தகுதி பெறுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும் , அரசாணை 56 ஐ நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தரையில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியவாறு மௌன விரதம் போராட்டம் நடைபெற்றது.