மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 8 பேர் ஸ்கிப்பிங் ஆடியவாறே ஒன்பது கிலோமீட்டர் தொலைவை கடந்து சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில், 6 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுவேதா, ப்ரியா, அக்ஷ்யா மஞ்சு, சத்திதேவி, மதுமிதா ரிஷிவர்தினி, வர்ஷினி ஆகிய 8 மாணவிகள் ஒன்பது கிலோமீட்டர் தொலைவு 40 நிமிடங்களில் கடந்து இந்த சாதனையை படைத்தனர்.
சித்தர்காட்டில் தொடங்கிய இந்த ஸ்கிப்பிங் மினி மராத்தானை அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஷ் தொடக்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவிகள் ஒன்பது கிலோமீட்டர் தொலைவை இடையில் எந்த ஓய்வும் எடுக்காமல் தொடர்ச்சியாக கடந்து சாதனை படைத்தனர். ஷீகான் ஹுசைனி இஷின்யு கராத்தே பயிற்சி பள்ளி மாணவிகளின் ஸ்கிப்பிங் மினி மராத்தானை சாதனையாக பதிவு செய்தது. சாதனை படைத்த மாணவிகளுக்கு இளவரசி எழிலன், பயிற்சியாளர் சென்சாய் சசிகுமார் ஆகியோர் சான்றிதழை வழங்கி பாராட்டினர்.