நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள். தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு:-

செய்திகள்

மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள்:- கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டும், சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்தும் கண்காணித்து வந்தபோதிலும், குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில், வில்லியநல்லூர் பகுதியில் விவேக்சங்கர் என்பவர் நடத்திவரும் மெடிக்கல் ஷாப்பில் நள்ளிரவில் சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

ஆனால், கடையில் பெரிய அளவில் ரொக்கம் இல்லாததால், கையில் கிடைத்த லேப்டாப், செல்போன் மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, கடையை திறந்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் மெடிக்கல் கடை திறந்து கிடப்பதைக் கண்டு விவேக்சங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின்பேரில், மணல்மேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் மெடிக்கல் ஷாப்பின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *