மாட்டு வண்டிகளுக்கு மணல்குவாரி அனுமதி வழங்காவிட்டால் வருகின்ற மார்ச் 4ம்தேதி மாட்டுவண்டிகளுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து மாட்டுவண்டி சங்கத்தினர் அறிவிப்பு:-

செய்திகள்

மாட்டு வண்டிகளுக்கு மணல்குவாரி அனுமதி வழங்காவிட்டால் வருகின்ற மார்ச் 4ம்தேதி மாட்டுவண்டிகளுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து மாட்டுவண்டி சங்கத்தினர் அறிவிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிகளுக்கு மணல்குவாரி அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்து மாட்டுவண்டி சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர் அவர்கள் அளித்த மனுவில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி இயங்கியபோது மாட்டுவண்டிகளுக்கு மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதனால் கொள்ளிடக்கரையோர கிராமங்களில் மாட்டுவண்டியை நம்பி பிழைப்பு நடத்தியவர்கள் பயனடைந்து வந்தோம். கடந்த 2021ம் ஆண்டு முதல் மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்காததால் 300க்கும் மேற்பட்டோர் மாடுகளுக்கு தீவணம் வாங்கிகூட போடமுடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இது குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மனுஅளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுப்பதற்கு குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மறுக்கப்படுவதற்கான சரியான காரணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. நியாயமான முறையில் பல ஆண்டுகளாக மனுஅளித்தும் இதுவரை எந்த பயனும் அளிக்கவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டு வண்டிகள் மணல் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி மாட்டு வண்டிகளுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் மக்கள்குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துவிட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *