காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரஉறுதி சான்று (எண்குவாஸ்) வழங்குவதற்காக தேசிய மதிப்பீட்டாளர் மூத்த தர ஆலோசகர் ஆய்வு:-

செய்திகள்

மயிலாடுதுறை வட்டார தலைமை மருத்துவமனையான காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரஉறுதி சான்று (எண்குவாஸ்) வழங்குவதற்காக தேசிய மதிப்பீட்டாளர் மூத்த தர ஆலோசகர் ஆய்வு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா காளி கிராமத்தில் அரசு வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தினசரி 200 புறநோயாளிகள் வரை வந்து செல்லும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரஉறுதி சான்று அளிப்பதற்கான ஆய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூத்த தர ஆலோசகரும், தேசிய மதிப்பீட்டாளருமான ராஜசேகர் பாபு மற்றும் தரஆலோசகர் லாவண்யாகுமார் பட்டினம் ஆகிய இருவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மத்திய அரசின் நிதி மருத்துவ செலவினங்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்களின் செயல்பாடுகள், கட்டட பராமரிப்பு, குடிநீர், தூய்மை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள், லேப், அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றின் தரம் ஆகியன குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கிளின்டன் ஜூட், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு வல்லுநர் மற்றும் தர மருத்துவ அலுவலர் பிரவீன், வட்டார சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *