தந்தையின் நினைவு நாளில் 500 மாற்றத்திறனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்.

செய்திகள்

தந்தையின் நினைவு நாளில் மகன் செய்த அற்புத செயல். 500 மாற்றத்திறனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் திமுக மூத்த முன்னோடியாக இருந்து வந்த மிசா மதிவாணன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ கலந்துகொண்டு, 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் கம்பு, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட சத்துமாவு அடங்கிய சத்துணவு பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

மேலும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.2000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மிசா மதிவாணன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தந்தைக்கு மகன்கள் செய்த இந்த நினைவு நாள் விழா காண்போரை வியக்க செய்தது. இந்த விழாவை மிசா மதிவாணனின் மகன்கள் பி.எம்.அன்பழகன் மற்றும் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.