மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா விக்ரமன் குத்தாலம் மகாகாளியம்மன் ஆலய வைகாசி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு அலங்கார காவடிகளுடன் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மகா காளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு பாலாபிஷேகமும் மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை விக்ரமன் குத்தாலம் கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.