மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே முன் விரோத மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இரவு சாமி ஊர்வலத்தின் போது ஒரு தரப்பினர் திடீரென பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் மர்ம நபர்கள் குண்டு வீசி சென்றுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படாததால் காயம் இன்றி தப்பித்துள்ளனர். மேலும் கொழுந்து விட்டு எரிந்த தீயை பொதுமக்களும்,போலீசாரும் தண்ணீர் விட்டு அனைத்துள்ளனர்.இது குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசில் கிராம மக்கள் சார்பில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும் குற்றவாளிகளை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலைய வாசலில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காவல் நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சாமி ஊர்வலத்தின் பொழுது பெட்ரோல் குண்டு வீசிய 147,148 உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் கொண்டத்தூர் பண்டாரவடை பகுதியை சேர்ந்த நிஷாந்த் 20, ராதாகிருஷ்ணன் 19, மதன் 23, சஞ்சய் 19, அமிர்த கணேசன் 26 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.